Article

என்னது கேக் பண்ணுறது இவ்வளவு ஈஸியா!!! 3 பொருள் இருந்தாலே போதும் கேக் செஞ்சிடலாம்

வீட்டில் ஒரு எளிய கேக் செய்வது எப்படி என்று யோசிக்கிறீர்களா? எளிதான முறையில் வீட்டில் கேக்கை எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இங்கே காணலாம்.

உங்களுக்கு வீட்டிலேயே கேக் தயாரிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளதா? எப்படி சுலபமாக கேக் தயார் செய்ய முடியும் என்று குழப்பமாக இருக்கிறதா? உண்மையில் கேக் தயார் செய்வது என்பது மிகவும் சுலபமான விஷயம் தான். கடையில் வாங்கியதை விட வீட்டில் தயாரிக்கப்பட்ட கேக் நிச்சயமாக கூடுதல் சுவையுடன் இருக்கும்.

ஆனால் வீட்டில் கேக் தயாரிப்பது கடினம் என்று பலர் நினைக்கிறார்கள். இந்த கேக்கைப் பற்றிய ஒரு சிறந்த விஷயம் என்னவென்றால், உங்கள் வீட்டிற்கு ஏற்றவாறு உங்களுக்கு விருப்பமான எந்தவொரு சுவையையும் நீங்கள் கேக்கில் சேர்க்கலாம். நீங்கள் கேக் தயாரிக்கும் போது அதில் பயன்படுத்தப்படும் பொருட்களின் அளவுகளை சரியாக பின்பற்றினால், கேக்கின் சுவையும் உயரும்,

பஞ்சு போன்று மென்மையாகவும் இருக்கும். மேலும் இந்த கேக்கில் உலர்ந்த பொருட்களை சேர்ப்பதும் அதன் சுவையை கூடுதலாக மாற்றும். தற்போதைய ஊரடங்கு காலகட்டத்தில் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு பிறந்த நாள், கல்யாண நாள் போன்ற சிறப்பு நாட்கள் என்று வரும் போது, அவர்களுக்கு நீங்களே உங்கள் கைகளால் கேக் தயார் செய்து கொடுத்து அசத்தலாம்.