Article

ஸ்மார்ட்போன் பார்க்கும் குரங்கின் அலப்பறை.. அடக்க முடியாம சிரிப்பீங்க: வைரல் வீடியோ..!

குரங்கு வீடியோகளுக்கென இணையத்தில் தனி கிரேஸ் உள்ளது. குரங்குகளின் கோமாளித்தனத்தையும் அவை செய்யும் சேட்டைகளையும் இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. குரங்குகள் செய்யும் பல வித குறும்புகளை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். 

சாலைகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசங்களுக்கும் அளவில்லை. சாலையில் நடந்து செல்பவர்களின் பொருட்களை பிடுங்குவது, வழிப்போக்கர்களின் தோளில் சென்று அமர்வது, அவர்கது முடியை பிடித்து இழுப்பது என இவை பல வழிகளில் மக்களை தொந்தரவு செய்கின்றன. 

சமீபத்தில் வெளிவந்துள்ள ஒரு குரங்கு வீடியோ அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இது இணையவாசிகளுக்கு ஆச்சரியம் அளித்துள்ளதோடு அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரல் ஆகி வருகின்றது. மனிதர்களை போலவே மொபைல் போனுக்கு அடிமையாகியுள்ள குரங்கின் வீடியோ ஒரு புறம் வேடிக்கையாக இருந்தாலும், ஒரு புறம் விலங்குகளும் இந்த மொபைல் மோகத்துக்கு பலியாக வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

மொபைல் பார்க்கும் குரங்கு:

வீடியோவில் வண்ணமயமான உடைகளை அணிந்து குரங்கு ஒன்று மெத்தையில் படுத்துக்கொண்டு மொபைல் போனில் எதையோ பார்த்துக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது. அது மிக சுவாரசியமாக அதிக கவனத்துடன் போனை பார்க்கிறது. இடையில் யாரோ தன்னை வீடியோ எடுக்கிறார்கள் என்பது தெரிந்து தலையை தூக்கி மேலே பார்க்கிறது. ஆனால், அதன் பின்னரும் அதை பற்றி பெரிதும் அலட்சியம் செய்யாமல் மீண்டும் மொபைல் போனை மும்முரமாக பார்க்கிறது.

மொபைலில் மூழ்கிப்போன குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்: