HEALTH

இப்படி செஞ்சா தான் முறுங்கைகீரை நல்லா இருக்கும்

கீரைகள் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது இன்னும் நல்லது. அதோடு இந்த கீரை எளிதில் கிடைக்கக்கூடியது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்தம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்த சோகை உள்ளவர்கள் முருங்கைக்கீரையை அடிக்கடி சாப்பிடுவது, இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட உதவும்.

முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது.

முருங்கை மரத்தின் வேரிலிருந்து இலை வரைக்கும் அத்தனைமருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.முருங்கைக் கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லா வகையில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.

உடலை வலிமைப்படுத்தும் சக்தி முருங்கைக் கீரைக்கு உண்டு. நரம்புகளை வலுப்படுத்தும் தன்மையும் உண்டு. மேலும், இது ஆண்மை பிரச்சனையையும் சரி செய்கிறது. முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுப்பெறும்.