Article

இந்த நாயோட பாசத்தைப் பாருங்க…மெய்சிலிர்த்துப் போவீங்க.. தனுக்கு உணவிட்ட நபரை அரண்போல் காத்து நின்ற நாய்..!

மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலி என பெயர் எடுத்தது நாய்கள் தான். அதனால் தான் காவல்துறையிலேயே குற்றங்களை கண்டுபிடிப்பதில் நாய்களை பயன்படுத்துகின்றனர். மோப்பநாய்கள் காவல்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பொதுவாகவே நாய்கள் நன்றி உணர்வுக்கு மிகவும் பிரசித்தி பெற்றவை. நாயை வீட்டுக் காவலுக்கு, வேட்டைக்கு, பாசம் காட்டி வளர்ப்பதற்கு என பலவகையிலும் பயன்படுத்துபவர்களைப் பார்த்திருப்போம். அதனால் தான் பலரும் தங்கள் வீட்டில் நாய் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இங்கேயும் அப்படித்தான்..ஒருவர் தன் வீட்டில் நாய் வளர்த்து வந்தார்.

அவர் மிகப்பெரிய குடிகாரர். குடித்துவிட்டுச் சாலையில் அடிக்கடி ஆங்காங்கே தன்னை மறந்து மயங்கியும் விழுவார். அவர் எப்போதும் தன் நாய்க்கு நேரத்திற்கு உணவினைக் கொடுத்துவிடுவார். இதனால் அந்த நாய் அவர் மேல் உயிரையே வைத்திருந்தது. அவர் குடித்துவிட்டு வழியில் எங்காவது மயங்கி விழுந்தாலும் கூட அந்த நாய் அவருக்குப் பக்கத்திலேயே காவல் காக்கும். அவர் தன்னை மறந்து இருக்கும் நிலையிலும் அந்த நாய் தான் அவரது பாதுகாவலன்.

அவர் அப்படி ஒருநாள் குடித்துவிட்டுச் சாலையில் விழுந்து கிடந்தார். அவருக்குப் பக்கத்தில் அவரது நாய் போய் நின்றது. போலீஸ்காரர் ஒருவர் குடித்துவிட்டு ரோட்டில் கிடந்த நாயின் எஜமானரை அடிக்க லத்தியைத் தூக்கினார். அடுத்த நொடி அந்த நாய்க்கு கோபம் வந்ததே பார்க்கலாம். அந்த போலிஸ்காரை கடிக்கச் சென்று, துரத்தியே அந்த ஏரியாவை விட்டே அனுப்பியது. அத்தோடு விட்டிவிடவில்லை. மீண்டும் நேரே அந்த எஜமானாரின் பக்கத்திலேயே போய் படுத்துக் கொண்டது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.