Article

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் விலகிய மர்மம்.. ரத்தத்தில் அபாய கெமிக்கல்.. உள்ளே இறங்கிய 10 பாட்டில்..!

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்த உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர்

தமிழில் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கலாபவன் மணி.

மலையாளத்தில் பிரபலமான நடிகரான இவர் தமிழில் தென்னவன், ஜே ஜே, குத்து, ஏய், ஜித்தன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மிமிக்கிரி கலைஞராக இருந்த இவர் பின்னர் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகரான வலம் வந்தார்.

இந்த நிலையில் தான் கடந்த 2016ஆம் ஆண்டு தனது 45வது வயதில் கலாபவன் மணி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என செய்திகள் பரவின.

மர்மம் விலகியது

அதன் பின்னர் கொலை என்கிற பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது அவரது இறப்பு குறித்த மர்மம் 7 ஆண்டுகளுக்கு பின் விலகியுள்ளது.

பீர் மதுவகையை அதிகம் குடிக்கும் பழக்கமுடையவராக கலாபவன் மணி இருந்துள்ளார். அதற்கு அவர் அடிமையானதால் தினமும் 12 முதல் 13 பீர் போத்தல்களை எடுத்துக் கொண்டதால் கல்லீரல் செயலிழந்துள்ளது. ஆனாலும் அவர் அதனை கைவிடவில்லை.

ஒரு கட்டத்தில் கலாபவன் மணி இரத்த வாந்தி எடுத்துள்ளார். அப்போதும் அவர் பீர் குடிப்பதை நிறுத்தவே இல்லை. கடைசியாக அவர் இறந்த அன்றும் 12 பீர் குடித்துள்ளார். அதன் காரணமாகவே அவரது உயிர் பறிபோயுள்ளது என வழக்கை விசாரித்து வந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுப்பழக்கத்தால் தவிர்க்க முடியாத கலைஞர் தனது உயிரை இழந்தது திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.