Article

குபேர யந்திரத்தை இந்த திசையில் வைங்க… வீட்டில் பணம் சேர்ந்துட்டே இருக்குமாம்..!

வீட்டில் குபேர யந்திரத்தை வைத்து வழிபடுபவர்களுக்கு செல்வம் சேரும் என்பது ஐதீகம். அதனை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குபேர யந்திரம்

செல்வத்தின் கடவுளாகவும், யக்ஷர்களின் (இயற்கை சக்திகளின்) ராஜா என்றும் குபேரர் அழைக்கப்படும் நிலையில், வேத சாஸ்திரத்தின் படி செல்வம் மற்றும் செழிப்பின் பிரதினியாகவும் இருக்கின்றார்.

ஆதலால் நாம் செல்வத்தை பெறவும், ஏற்கனவே இருக்கும் செல்வத்தை பாதுகாக்கவும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் குபேர யந்திரத்தை வைக்கலாம். 

குபேரரின் சக்திகள் மற்றும் நேர்மறை ஆற்றல் மட்டுமின்றி குபேரரின் கொள்கைகளையும் அதன் மந்திரத்தின் மூலம் ஈர்க்கும் சக்தியை கொண்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

மேலும் குபேர யந்திரத்தை வழிபடுபவர்களுக்கு ஏராளமாக செல்வம் பெருகும் என்பதும் ஐதீகமாம். வீட்டில் நிதி நெருக்கடியான தருணங்களில் குபேர யந்திரத்தை வைத்துக்கொண்டால், பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

எந்த திரையில் குபேர யந்திரத்தை வைக்கலாம்?

குபேரரின் திரையாக வடக்கு திரையாக கருதப்படுவதால், வடக்கு சுவரில் குபேர யந்திரத்தை வைக்கலாம்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் கதவு எப்போதும் வடக்கு திசையில் திறக்கும் வகையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் குபேரரின் அருளும், லக்ஷ்மி தேவியும் உங்களுக்கு கிடைக்கும்.

வடக்கு திசையில் வைத்து வழிபட்டால் நிதி நெருக்கடியை சந்திக்காமலும், மற்ற பிரச்சினைகளும் நீங்கி மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

வீட்டிற்கு பண செழிப்பையும் செல்வத்தையும் கொண்டு வர, குபேர் யந்திரத்தை வீட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் வைக்கலாம்.

குபேரனையும் அவரது யந்திரத்தையும் வழிபடுவதால் துரதிர்ஷ்டம், எதிர்மறை ஆற்றல் ஆகியவை விலகும் நிலையில், தவறான திசையில் வைக்காமல் கவனமாக இருக்க வேண்டும். இதனால் பெரும் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாம்.