Article

ரூ.35,000 கோடி சொத்து வைத்திருந்தாலும் எளிமையாக இருப்பவர்.., யார் இந்த தமிழ்ப்பெண்..!

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 40 -வது இடத்தை பிடித்துள்ள பெண் ஒருவர் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

யார் அவர்?

Zoho கார்ப்பரேஷனின் இணை நிறுவனர் ராதா வேம்பு (Radha Vembu). இவர் செல்ஃப்-மேட் இந்தியப் பெண்மணி பெருமையை 360 One Wealth Hurun India Rich List 2023-ன் மூலம் பெற்றார்.

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 40வது இடத்தை பிடித்துள்ள Radha Vembu -வின் சொத்து மதிப்பு ரூ.34,900 கோடி ஆகும்.

Radha Vembu மற்றும் Sridhar Vembu -வின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெனோகிராஃபராக இருந்தார். மிகவும் நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர்கள் உழைப்பால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளனர்.

1996 -ம் ஆண்டு ஸ்ரீதர் வேம்புவால் Zoho நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்டது. சென்னை ஐஐடியில் தொழில்துறை நிர்வாகத்தில் பட்டம் பெற்ற பிறகு 1997 -ம் ஆண்டு Radha Vembu Zoho-வில் இணைந்தார். தொழில்நுட்பத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக அவர் முன்னேறினார்.

பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான Zoho -வில் இருந்து Radha Vembu பெரும் வருமானத்தை ஈட்டுகிறார். Zoho நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும் Sridhar Vembu 5 % பங்குகளை மட்டும் தான் வைத்துள்ளார். ஆனால், அவரது சகோதரி ராதா வேம்பு 47 % பங்குகளை வைத்துள்ளார்.

இவர்கள் தங்களுடைய போராட்டம், வெற்றி மற்றும் எளிமைக்கு பெயர் பெற்றவர்கள். ராதா வேம்பு தலைமையின் கீழ் Zoho அதன் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.