HEALTH

தோல் அரிப்பு சோரியாசிஸ் கடி எக்ஸிமாஇவை அனைதிற்க்கும் நிரந்தர தீர்வு வீடியோ இணைப்பு

முக்கியமான விவாதங்களில் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென ஏற்படும் அரிப்பால், கைகளை மறைமுக இடங்களில் வைத்து, சொறியும்போது என்னவாகும்? மரியாதைக்குரிய ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது,

தாங்கமுடியாத அரிப்பு ஏற்பட்டு, தொடை இடுக்கு அல்லது அந்தரங்கப் பகுதிகளில் சொறியும்போது, நம் மதிப்பு அங்கே சரிந்துவிடும்.

உடலில் அரிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன, நாம் உறங்கும்போதோ, வயல்வெளிகளில் நடமாடும்போதோ விஷப்பூச்சிகள் கடிப்பதாலோ அல்லது நம்மீது படுவதாலோ ஏற்படுபவை.

நாம் சாப்பிடும் உணவில் நமக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் கருணைக்கிழங்கு, கத்தரிக்காய் போன்ற சில காய்கறிகளை, மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும். சிலருக்கு எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்பதே தெரியாமல்,. உடல் எங்கும் சிவந்து வீங்கிவிடும் இதுவும் ஒவ்வாமை பாதிப்பே.