Article

மதுரை ‘ஸ்ரீ மாருதி காபி பார்’ நடத்திவந்த உரிமையாளர் ஹரி செய்த காரியத்தை பாருங்க..!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் ‘ஸ்ரீ மாருதி காபி பார்’ என்ற பெயரில் ஒரு கடை நடத்தி வந்து கொண்டிருந்த ஹரி. ஒரு காலை வேளை.
பரபரப்பான கூட்டம். வந்தவர்களுக்கு தேனீர், காப்பி என்று தன் கையாலேயே ஆற்றி விரைந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஹரி.
#மேன்மக்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் ‘ஸ்ரீ மாருதி காபி பார்’ என்ற பெயரில் ஒரு கடை நடத்தி வந்து கொண்டிருந்த ஹரி. ஒரு காலை வேளை. பரபரப்பான கூட்டம். வந்தவர்களுக்கு தேனீர், காப்பி என்று தன் கையாலேயே ஆற்றி விரைந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஹரி.
ஒரு வயதான அம்மா தயங்கித் தயங்கி ஹரியை நெருங்கி அவர் டீ ஆற்றிக் கொண்டிருந்த மேஜை மீது ஒரு ஜோடிக் கொலுசுகளை வைத்தார்.

“என்னம்மா கொலுசை வைக்கிறீங்க?” என்று டீ ஆற்றுவதை நிறுத்திவிட்டுக் கேட்டார் ஹரி.

“தம்பி..எதிரே உள்ள சவக்கிடங்கில் மகன் உடல் கிடக்கிறது. அடக்கம் செய்ய காசு இல்ல.
ஒரு வயதான அம்மா தயங்கித் தயங்கி ஹரியை நெருங்கி அவர் டீ ஆற்றிக் கொண்டிருந்த மேஜை மீது ஒரு ஜோடிக் கொலுசுகளை வைத்தார். “என்னம்மா கொலுசை வைக்கிறீங்க?” என்று டீ ஆற்றுவதை நிறுத்திவிட்டுக் கேட்டார் ஹரி. “தம்பி..எதிரே உள்ள சவக்கிடங்கில் மகன் உடல் கிடக்கிறது. அடக்கம் செய்ய காசு இல்ல.
அதான் கொலுசை அடகு வைத்து..”என்று இழுக்கிறார் அந்த வயதான அம்மா.

“சவ அடக்கம் செய்ய இந்தக் கொலுசை அடகு வைத்து அதில் கிடைக்கும் பணத்தில் எதுவும் செய்யமுடியாதே அம்மா..இந்த நேரத்தில் அடகுக் கடையும் திறந்து இருக்காதே” என்ற ஹரி, டீக் கடையில் வேலை பார்க்கும்..
ஒருவரிடம் கடையை ஒப்படைத்து விட்டு கிளம்பிவிட்டார்…’எப்படியும் அந்த வயதான தாய்க்கு உதவி விட வேண்டும்’ என்ற வைராக்கியம் அவர் மனதில் குடிகொண்ட நாள் அது!

இந்த சம்பவம் ஹரியை பாதிக்க, அதன் விளைவு?

இன்று நேதாஜி ஆம்புலன்ஸ் என்ற பெயரில் 6 ஆம்புலன்ஸ்களை அவர் வாங்கி,
இயக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஹரியின் சொந்த ஊர் திருச்சி. மணமானதும் மனைவி ஜெயந்தி ஊரான மதுரை வந்து, ஸ்ரீ மாருதி காபி பார் என்ற பெயரில் ஒரு டீக்கடையை ராஜாஜி அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் நடத்த ஆரம்பித்தார்.
அங்கே தினசரி வரும் பலர் பணமில்லாத ஏழைகளாக இருந்தார்கள். அடக்கம் செய்யக் காசில்லாமல் அவர்கள் அங்கிருந்து வீட்டுக்குச் சவத்தை எடுத்துச் செல்லக்கூட முடியாமல் தவித்த தவிப்பு ஹரி மனதை உலுக்கியது.

இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தன் மனைவியிடம் ஆலோசனை செய்தார்.
இருவரும் ஆம்புலன்ஸ் வாங்கி இப்படிப்பட்ட ஏழைகளுக்கு உதவலாம் என்று முடிவு செய்தார்கள். பணம்?

இருந்த சொற்ப நிலத்தை விற்று அதில் ஆம்புலன்ஸ்களை வாங்கினார்கள்.
இப்போது ஆம்புலன்ஸ்கள் ஆறும் மதுரை நகரை சுற்றிச் சுற்றி வருகிறது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஹரிக்குப் பிடித்தத் தலைவர்.
எனவே ஆம்புலன்ஸுக்கு நேதாஜி என்ற பெயரைச் சூட்டி இருக்கிறார்.

பணம் இல்லாதவர்களின் சடலங்களை ஏற்றிச் செல்வதோடு மேற்கொண்டு அவர்களுக்கு ஆகும் செலவுகளுக்கும் பணம் கொடுத்து உதவி வருகிறார் ஹரி!

108 இலவச ஆம்புலன்ஸ் சேவை தமிழகத்தில் அறிமுகம் ஆகும் முன்பே,
மதுரையில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை முதலில் ஆரம்பித்தவர் ஹரி.
அசாதாரண நிலையில் மரணம் நிகழல் மற்றும் சாலை விபத்து எங்கு நடந்தாலும் உடனே அந்த இடத்திற்கு விரைந்து செல்லும் ஹரியின் ஆம்புலன்ஸ், உடனே ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்க்கிறது.
“இறந்துபோனவங்க நிச்சயமா கடவுளுக்குச் சமம்தான்! அதனாலதான், இன்னைக்கும் பிணத்தை தூக்குறதுக்கு முன்னாடி, அதைத் தொட்டுக் கும்பிட்டுட்டு நாங்க தூக்குறோம்!”என்று சொல்லும் 48 வயது ஹரி, தானே களத்தில் இறங்கி கூச்சப்படாமல், அச்சப்படாமல் பிணங்களைத் தூக்கி இறக்க அனைவருக்கும் உதவி செய்கிறார்.
உடல் வாங்கக் காத்திருக்கும் உறவுகளின் களைப்பைப் போக்க தேநீர் விற்பனை செய்பவர், பிணவறையில் கூறுபோட்டு எடுத்துச் செல்லப்படும் உடல்களை அலங்கரிக்க காடாத்துணி, பஞ்சு,சந்தனம்,மாலை,ஊதுவத்தி உள்ளிட்டவைகளையும் கடை நிறைய அடுக்கியிருக்கிறார். ‘பணம் கொடுத்தால் வசதி படைத்தவர்களுக்குப் பொருள்!
வசதி இல்லாதவர்களுக்கு, அவர்கள் கேட்பதற்கு முன்னர் இலவசமாகப் பொருள்!’ இதுதான் இவரது கொள்கை!

” ‘பிணத்துக்கான பொருளுக்கு பணம் கேட்குறது தப்போ?’ன்னு, எனக்குள்ளே ஏற்பட்ட ஒரு குற்ற உணர்ச்சிதான் நான் செய்ற இந்த உதவிகளுக்கான தொடக்கம்!” எளிமையாய் பேசும் ஹரி..
சத்தமில்லாமல் இன்னொரு காரியமும் செய்து வருகிறார்.

அனாதைப் பிணங்களை எடுத்து வந்து, முறையாக பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி, நல்லடக்கம் செய்வதை கடந்த 19 வருடங்களாகத் தொடர்கிறார்.
தென்மாவட்டங்களில் எங்கு விபத்து என்றாலும்..
காவல்துறையிடம் இருந்து உடனடியாக ஹரிக்குத்தான் தகவல் வருகிறது. உடல் எந்த நிலையில் இருந்தாலும், சற்றும் அருவருப்பு கொள்ளாமல் தொட்டுத் தூக்குவது இவரது வழக்கம்! இதுவரை, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை இப்படி மீட்டிருக்கிறார்.
” ‘பிணம் தூக்குறது ஒரு வேலையா?’ என்று உறவுக்காரங்க எல்லாரும் என்கிட்டே இருந்து ஒதுங்கிட்டாங்க. இதுல பெருசா எதுவும் எனக்கு வருத்தமில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும், நாம சேர்த்து வைக்கிற புண்ணியங்கள்தான்,
வாழ்ற நாட்களை சந்தோஷமாக்கும். எல்லாத்துக்கும் மேல, சவத்துக்கு செய்யும் தொண்டு, சிவனுக்கு செய்யும் தொண்டு என்று சொல்லும் ஹரி..

மேன்மக்கள் மேன்மக்களே