Article

பாம்பை வீட்டுப்பக்கமே நெருங்க விடாத செடி… இதை மட்டும் வைச்சுப் பாருங்க.. இனி பாம்பு தொல்லையே இல்லை..!

பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கம் என்பது பழமொழி. தமிழ்த்திரைப்படங்களில் கூட எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் சூப்பர் ஸ்டார் ரஜினியே பாம்புக்கு பயந்து நடுங்கும் காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். நகரப் பகுதிகளில் வீட்டுக்கு முன்பு வைக்கப்படும் செடிகளிலும், கிராமப்பகுதிகளிலும், நீர் ஆதாரங்களின் அருகிலும் அடிக்கடி பாம்பைப் பார்த்திருப்போம்.

இந்த பாம்புகளை வீட்டுக்கு பக்கத்திலேயே நெருங்கவிடாத ஒரு சூத்திரம் இருக்கிறது. அதுதான் இது. அதற்கு ஒருசெடியை வீட்டில் வைத்தாலே போதும். அந்த செடி இருக்கும் திசைப்பக்கமே பாம்புகள் வராது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். முதலில் பாம்பு நடமாட்டம் இருப்பதாக சந்தேகம் வந்தாலே வீட்டைச் சுத்தி உப்புகல்லை போடவேண்டும். இதேபோல் சாணபாலுடன், நெருங்காயம் மற்ரும் பூண்டு சேர்த்து தெளித்தாலும் பூச்சி, பாம்பு வீட்டைச்சுற்றி அண்டாது.

வீட்டில் அடிக்கடி சாம்பிராணி புகைபோட்டு வைத்தாலும் பாம்பு தொல்லை இருக்காது. இதேபோல் பிளீச்சிங் பவுடர் அல்லது 810 என்ற பூச்சிக்கொல்லி பவுடர் கொண்டு தெளித்தாலும் பாம்புவராது. இதேபோல் வருடத்துக்கு இருமுறை குருணைமருந்தை வாங்கி அதனோடு, ஆற்றுமணல் கலந்து வீட்டைச் சுற்ரிப் போட்டால் பாம்பு வராது. வீட்டில் தர்ப்பப்பை புல் வளர்த்தாலும் பாம்பு அண்டாது. இதேபோல் மண்ணெண்ணெயில் கொஞ்சம் உப்பு சேர்த்து, அதனை தண்ணீரோடு கலந்து அடித்தாலும் பாம்பு வீட்டுப்பக்கமே வராது.

இதையெல்லாம் தாண்டி சில செடிகளை உங்கள் வீட்டில் வைத்தால் அதன் வாசனைக்கு பாம்பு உங்கள் வீட்டுப்பக்கமே வராது. அதாவது வீடோ, உங்கள் தோட்டமோ அதில் இடம் இருந்தால் சிறியநங்கை, பெரியநங்கை, நாகதாளி, ஆகாச கருடன் இவற்ரில் ஏதாவது ஒன்றை வைத்து பராமரியுங்கள். அந்த வாசனைக்கே பாம்பே வராது.