ArticleNEWS

14 ஆண்டு வாழ்க்கை முடிவு..! 3-வது திருமணம் செய்த சோயிப்!! சானியாவின் உருகவைக்கும் பதிவு..!

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவரும் பாகிஸ்தான் அணியின் வீரருமான சோயிப் மாலிக் 3-வது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

சானியா – சோயிப்

கடந்த சில நாட்களாக சானியா மிர்சா விவகாரத்து தொடர்பான செய்திகள் வெளியாகின நிலையில், அதனை பலரும் மறுத்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக இன்று சோயிப் மாலிகே பாகிஸ்தான் நாட்டின் நடிகையான சனா ஜாவீத் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்கள் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

3-வது திருமணம்

சோயிப் மாலிக்கிற்கு இது 3-வது திருமணமாகும். 2002-ஆம் ஆண்டில் ஆயிஷா என்பவரை திருமணம் செய்த அவர், 2010-இல் அவரை பிரிந்து அதே ஆண்டில் இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார்.

14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சட்டென தற்போது 3-வது திருமணத்திற்கு சோயிப் மாலிக் நகர்ந்துள்ளது சானியாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சானியா – சோயிப் பிரிவு குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த சூழலில் தான் சானியா கடந்த நாட்கள் முன்பு பதிவிட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது. அதில் அவர், Marriage is hard என பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.